வேலூரில் இருந்து தாம்பரம் செல்லும் பேருந்தில் பெண்களின் கைப்பையில் இருக்கும் தங்கம், வெள்ளி பொருட்களை சிலர் திருடி சென்றனர். இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய உதயகுமார்(42), அவரது மனைவி வள்ளி(40) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இருவரும் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை குறி வைத்து கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் உதயகுமார் மற்றும் வள்ளி ஆகியோரிடம் இருந்து 16 சவரன் தங்க நகை, 45 ஆயிரம் ரூபாய் பணம், 120 கிராம் வெள்ளி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.