
இந்தியாவின் நாஸ்ட்ரடாமஸ் என்று பிரபல ஜோதிடரான குஷால் குமார் அழைக்கப்படுகிறார். இவர் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெறும் போர் மற்றும் கமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெறும் போர் குறித்து முன்னதாக கணித்தவர். இந்நிலையில் தற்போது இவர் மூன்றாம் உலகப்போர் நடைபெறும் தேதி குறித்து அறிவித்துள்ளார்.
அதாவது அவர் நேற்று அல்லது இன்று போர் தொடங்கும் என்று அறிவித்திருந்தார். இதற்கு முன்னதாகவும் அவர் பலமுறை மூன்றாம் உலகப்போர் தொடங்கும் தேதிகளை அறிவித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவருடைய கணிப்புகள் தவறாகி வருகிறது. மேலும் மூன்றாம் உலக போர் நடைபெறும் தேதி குறித்து இவர் அடிக்கடி அறிவித்து வரும் நிலையில் இது மெய்யாகுமா என்பது பின்னர்தான் தெரியவரும்.