கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி‌ ஆகிய கிராமங்களில் கடந்த 29ஆம் தேதி பயங்கர நிலச்சரிப்பு ஏற்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த நிலச்சரிவினால் சிக்கி பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வரும் நிலையில் ஆளில்லாத வீடுகள் பூட்டி கிடைக்கிறது.

இந்நிலையில் தற்போது நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளை மர்ம நபர்கள் நோட்டமிட்டு கைவரிசை காட்டி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆளில்லாத வீடுகளை நோட்டுமிட்டு அவர்கள் நகை பணம் போன்றவற்றை கொள்ளையிடுகிறார்கள். அந்த வீடுகளில் இருப்பவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் நிலச்சரிவினால் கொத்து கொத்தாக உயிர்கள் பறிபோகும் நிலையில் இப்படிப்பட்ட கொடூரத்தனமான செயல்களில் சிலர் ஈடுபடுவது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.