இஸ்ரேல் மீது காசா கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. அதோடு லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக ஏராளமான குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த இரு மாதத்தில் மட்டும் சுமார் 200 குழந்தைகள் லெபனானில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அவசர நிதியம் தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 1200 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதேபோன்று ஐநா நிவாரண மற்றும் பணி முகமையின் ஆணையர் ஜெனரல் பிலிப் லாஸ்சாரிணி ‌ காசா குழந்தைகளின் கல்லறை ஆக மாறிவிட்டது எனவும், பாதுகாப்பு, கல்வி மற்றும் விளையாட்டு என அனைத்தையுமே குழந்தைகள் இழந்து தவிக்கிறார்கள் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.