கர்நாடக மாநிலம் உப்பினங்கடி  என்ற கிராமத்தில் வசித்து வந்த 37 வயது பெண் ஒருவர் கடந்த 16ஆம் தேதியன்று இரவு வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, வீட்டில் இருந்த 10ம் வகுப்பு படிக்கும் சிறுவன் மீது சந்தேகமடைந்த நிலையில்  கவத்துறையினர் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் உடலுறவு கொள்ள முயற்சித்ததும், அந்த பெண் மறுத்ததால் சிறுவன் அப்பெண்ணை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டான்.