மகாராஷ்டிரா மாநில மும்பையில் உள்ள கே இ எம் என்ற மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பேப்பர் பிளேட்டில் மருந்துகள் எழுதிக் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவிற்கு இணையத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து கே இ எம் மருத்துவமனையின் டீன் டாக்டர் சங்கீதா ராவத், இந்த தட்டுகள் நோயாளிகளின் அறிக்கைகளில் இருந்து தயாரிக்கப்படவில்லை. ஆனால் பழைய CT ஸ்கேன் கோப்புரைகள் ஸ்கிராப் டீலர்களுக்கு மறுசுழற்சி செய்வதற்காக வழங்கப்பட்டன என்று விளக்கம் அளித்துள்ளார்.