இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் சேவல் மூலம் அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி மற்றும் தம்பிக்கோட்டை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். என் நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் திரைப்பட அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

அப்போது ரோமியோ ஜூலியட் திரைப்படத்தின் படப்பிடிப்பின் முதல் நாள் வெள்ளை சட்டை மட்டும் அணிந்திருக்க வேண்டி இருந்தது. பேண்ட் எதுவும் இல்லை. இது எனக்கு மிகவும் அறிமுகம் இல்லாத ஒன்று. கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது. ஜெயம் ரவியுடன் நடித்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது எனவும் அவர் மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டார் எனவும் பூனம் பஜ்வா பகிர்ந்து கொண்டார்.