
18-வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் மும்பை அணியுடன் விளையாடிய போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றது. மற்ற 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த நிலையில் பேட்டிங் ஆர்டரில் தொடர்ந்து சொதப்பி வருகிறது.
இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோத இருக்கிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுவதால் இன்றைய தினம் தோனி கேப்டனாக செயல்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் கேப்டன் ருதுராஜ் தொடக்க வீரராக களமிறங்காமல் மூன்றாவது வீரராக களம் இறங்குகிறார். தொடக்க வீரராக களமிறங்கும் ராகுல் திரிபாதி பெரிய அளவில் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் விஜய் சங்கர் மற்றும் தீபக் ஹூடா ஆகியோரும் சொதப்புகிறார்கள். இந்நிலையில் சென்னை அணி தற்போது மும்பை வீரருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதாவது ரஞ்சிக்கோப்பையில் மும்பை அணிக்காக ஆயுஷ் மாத்ரேவ் தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் நிலையில் இவரை சென்னை அணி Mid season Trails-காக அழைப்பு விடுத்துள்ளது. மேலும் சிஎஸ்கே சிஇஓ காசிநாதன் ஆயுஷ் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் ஒரு சோதனை மட்டுமே தேவைப்படுவதால் அவர் வென்றால் கண்டிப்பாக நாங்கள் அவரை நல்ல முறையில் பயன்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.