சில தினங்களுக்கு முன் இந்துக்கடவுள் பிரம்மாவை பின்பற்றி தன் மகளை 62 வயது முதியவர் ஒருவர் திருமணம் செய்துகொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகியது. இந்த வீடியோவை முதலில் டிரோல் என டுவிட்டர் கணக்கில் சென்ற டிசம்பர் 25ஆம் தேதி பதிவிடப்பட்டு உள்ளது. அத்துடன் டெக்பரேஷ் (Techparesh) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி இந்த வீடியோ பதிவிடப்பட்டு உள்ளது. மேலும் பரேஷ் சதாலியா (Paresh Sathaliya) எனும் யூடியூப் பக்கத்திலும் இந்த வீடியோ இருக்கிறது.

இதேபோல் திருமணம் குறித்த வீடியோ அதிகம் பகிரப்படுகிறது. இந்நிலையில் தான் தன் மகளையே முதியவர் ஒருவர் திருமணம் செய்வதுபோன்று இருக்கும் வீடியோ திட்டமிட்டு வைரல் செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இதன் வாயிலாக தன் மகளையே முதியவர் திருமணம் செய்வதாக வைரலாகி வரக்கூடிய வீடியோவானது போலி என்பது தெரிகிறது. இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Paresh Sathaliya (@techparesh)