
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் செல்போன் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவது போன்ற பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். சோறு ஊட்டும் போது குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தாதீர்கள். ஏனெனில் திரையிலிருந்து வெளியே வரும் புறஊதாக்கதிர்கள் பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தும். பெரியவர்களின் மூளைவிட குழந்தைகளின் மூளை இரண்டு மடங்கு கதிர்வீழ்ச்சை உறிஞ்சக்கூடிய சக்தி உள்ளது .
கண்களை பாதிக்கும், தூக்கமின்மை, அறிவு திறன் குறைபாடு, மூளை செயல்பாடு போன்றவற்றை பாதிக்கிறது. செல்போனை அதிக நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு பேச்சு தாமதமாகும், மனநல குறைபாடு , குழப்பம் சிந்தனை, தடைபடுதல், உடல் பருமன் போன்ற மோசமான எலும்பு பிரச்சனை ஏற்படும் .செல்போன் தீங்கு விளைவித்தாலும் இன்று அத்தியாவசிய பொருளாக மாறி உள்ளது . அதனால் குழந்தைகளுக்கு குறைந்த நேரத்திற்கு மட்டுமே செல்போன் கொடுக்கலாம். முடிந்தவரை செல்போனை கையில் கொடுக்காமல் அருகில் இருக்கும் பூங்காவிற்கு அழைத்து செல்லலாம்.