
பெண் குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அதில் குழந்தைகளுக்கு பயன்பெறும் விதமாக மிக முக்கியமான திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இந்திய அரசின் இந்த திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் என்பது பெண் குழந்தைகளுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மத்திய அரசு சேமிப்பு திட்டம். இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 வருடங்களுக்கு செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெற்றோரும் அதிகபட்சமாக இரண்டு கணக்குகளை திறக்கலாம். ஒவ்வொரு பெண்களும் முதல், இரண்டாவது பிரசவத்திலிருந்து இரட்டைப் பெண் குழந்தைகள் இருந்தால் பெற்றோர் மூன்றாவது கணக்கை திறக்க இந்த திட்டம் அனுமதிக்கிறது.
கணக்கு தொடங்கும் பொழுது பெண் குழந்தைக்கு பத்து வயது குறைவாக இருப்பது கட்டாயம். இது தற்போது வருடத்திற்கு 8.2% வட்டி விகிதத்தை கொடுக்கிறது. காலாண்டுக்கு ஒரு முறை மாறுபடும். ஒரு வருடத்திற்கு 10,000 ரூபாயை இந்த திட்டத்தின் முதலீடு செய்தால் கடைசியில் 1.58 லட்சம் கார்பஸ் கிடைக்கும். 18 வயது ஆன பிறகு கூடுதல் பங்களிப்பு எதுவும் இல்லாமல் ஆறு வருட கூடுதல் வட்டியை வழங்குகிறது.