
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கத்தியனூர் பகுதியில் துளசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் சந்தோஷ் என்ற மகன் இருக்கிறார். இதில் சந்தோஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் தன் பெற்றோருக்கு தெரியாமல் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஓசூரில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். இந்த விவகாரம் துளசிக்கு தெரிய வரவே அவர் தன் மகனிடம் இது பற்றி கேட்டுள்ளார்.
அப்போது தந்தை மகனுக்கு இடையே தகறாறு முற்றியது. கோபத்தில் மகன் என்றும் பாராமல் சந்தோஷை துளசி சரமாரியாக அடித்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சந்தோஷ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது தொடர்பாக திருப்பத்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து துளசியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.