
தாய்லாந்தின் பாங்காக்கில் மார்ச் 28, வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 அளவிலான பயங்கர நிலநடுக்கத்தால் ஒரு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் குறைந்தது 43 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில், மேல் பகுதியில் கிரேன் இருந்த அந்த உயரமான கட்டிடம் புழுதி மேகமாக கண்டு கொள்ள முடியாத அளவிற்கு இடிந்து விழுவதும், அதை பார்த்த மக்கள் அலறி ஓடுவதும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின் பேரில், இந்த நிலநடுக்கம் சாகெயிங் நகரத்துக்கு வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில் மற்றும் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என தெரிவித்துள்ளது. தற்போது வரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. இதுவரை சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை. மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.