
தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் CEO ஹான் ஜாங்-ஹீ நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். டிவி மார்க்கெட்டிங்கில் தனது வாழ்க்கையை தொடங்கிய ஹான் ஜாங்-ஹீ சாம்சங் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தின் CEO- வாக ஹான் ஜாங்-ஹீ நியமிக்கப்பட்டார். அவர் சாம்சங்கின் நுகர்வோர் எலக்ட்ரானிக் மொபைல் சாதனப் பிரிவுகளை கவனித்து வந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.