
ரஷ்யாவை சேர்ந்தவர் போரீஸ் ஸ்பாஸ்கி. இவர் முன்னாள் உலக செஸ் சாம்பியன் ஆவார். பனிப்போர் காலத்தில் இருந்தே செஸ் உலகத்தில் உச்சத்தில் இருந்தார். இவர் உலக ஜூனியர் சாம்பியன், இளம் கிராண்ட் மாஸ்டர் போன்ற பட்டங்களை வென்றுள்ள நிலையில் கடந்த 1966 ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதனை 1972 ஆம் ஆண்டு வரை அவர் தக்க வைத்திருந்தார். இதை தொடர்ந்து கடந்த 1972 ஆம் ஆண்டு அமெரிக்க வீரர் பாபி பிஷ்ஷரால் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். இவருக்கு 88 வயது ஆகும் நிலையில் தற்போது உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார். மேலும் இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.