
பத்மஸ்ரீ விருது வென்ற விஞ்ஞானி சுப்பண்ணா அய்யப்பன் (70) தற்போது காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவரை கடந்த மே மாதம் 7-ம் தேதி காணவில்லை என போலீசில் புகார் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாண்டியா பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் அவரது சடலத்தை மீட்டுள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் வேளாண் கவுன்சிலுக்கு தலைமை தாங்கிய முதல் பயிற்சி சாரா ஆராய்ச்சி விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.