தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஏராளமான மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதோடு கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 21581 பேர் தேர்வு எழுதிய நிலையில் இவர்களில் 20526 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 95.11 சதவீதமாக இருக்கும் நிலையில் மாநில அளவில் விழுப்புரம் 18 வது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்த கோகுல்நாத் என்ற சிறுவன் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தோல்வியடைந்தான். இதனால் சிறுவன் வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.