தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அடிலாபாத் பகுதியில் ஒரு வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் ஜாதவ் தேவரா என்ற விவசாயி விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது லோன் கொடுமை தாங்காமல் அந்த விவசாயி வங்கிக்குள் நுழைந்து விஷம் குடித்துள்ளார்.

ஆனால் அதனை அங்கிருந்த ஊழியர்கள் யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் பாட்டிலை தூக்கி வீசிவிட்டு மயங்கி விழுந்த பிறகு தான் ஓடி வருகிறார்கள். மேலும் இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.