மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று ஒரு 16 வயது சிறுவன் வாளுடன் அரசு பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவன் அரசு பேருந்துடன் சேர்த்து 3 ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் ஒரு தண்ணீர் டேங்கர் லாரி ஆகியவற்றையும் அடித்து சேதப்படுத்தியுள்ளான். இந்த தாக்குதலில் பேருந்துக்கு மட்டும் சுமார் 70000 அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின் படி உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை கைது செய்தனர்.

 

அந்த சிறுவனின் நடத்திய விசாரணையில் மாமா தன்னை கேலி செய்ததால் கோபத்தில் அரசு பேருந்தின் கண்ணாடியை வாளால் அடித்து உடைத்ததாக கூறியுள்ளார். இந்த சிறுவன் மீது ஏற்கனவே கடந்த வருடம் கொலை முயற்சி உட்பட 3 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் அவருடைய தந்தையும் குற்றப்பாதையில் இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சிறுவனை தற்போது சீர்திருத்த மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் பரவலாக வைரல் ஆகிறது.