
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி சேர்ந்தவர் பிச்சைமணி. 47 வயதான பிச்சைமணி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிச்சைமணி சங்கரலிங்கபுரத்திற்கு வாழைத்தார் வெட்டுவதற்காக சென்றபோது விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
அந்த சிறுமி விடுமுறையில் தனது பெரியம்மா வீட்டிற்கு வந்துள்ளார். தனக்கு பாலியல் தொந்தரவு அளித்த பிச்சைமணி குறித்து சிறுமி அழுது கொண்டே தனது பெரியம்மாவிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பிச்சைமணியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.