தமிழகத்தில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் அனைவரும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் வைப்பு நிதி இந்த திட்டத்தின் கீழ் செலுத்தப்படுகிறது. அந்த வைப்பு நிதிக்கான ஆவணம் குழந்தைகளின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் விதிகளின்படி பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் பயனாளிகள் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் பயனாளிகள் ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம்,வட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகளால் சான்றோப்பம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது