முன்பெல்லாம் பெண் குழந்தைகள் என்றாலே வெறுக்கும் நிலைமை இருந்து வந்தது. ஆனால் இப்போது பெண்கள் எல்லா துறையிலும் சாதித்து வருகிறார்கள். இந்த நிலையில் பெண் குழந்தைகளுடைய எதிர்காலத்தில் நிதி பாதுகாப்பை தருவதற்கு பல்வேறு திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் கர்நாடகா அரசின் பாக்கியலட்சுமி திட்டம் . இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் 21 வயது நிறைவடைந்ததும் அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும். அது குழந்தையின் உயர்கல்வி திருமணம் மற்றும் இதர செலவுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் இந்த திட்டத்தில் சேர ஆண்டு வருமானம் இரண்டரை  லட்சத்திற்கும் குறைவாக உள்ள இந்திய குடிமக்கள் தகுதியானவர்கள். மேலும் ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களும் தகுதியானவர்கள். முக்கியமாக மார்ச் 31 2006 வருடத்திற்கு பிறகு பிறந்தவர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள். இந்த திட்டத்தில் சேருவதற்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை,, ஜாதி சான்றிதழ் போன் நம்பர், வங்கி கணக்கு எண் போன்ற ஆவணங்கள் தேவை.