சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டையில் மகளிர் திறன் மேம்பாடு மையம் திறப்பு விழாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் கலந்துகொண்ட முதல்வர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். இதனை அடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது, புத்தாண்டு தொடங்கியதும் நான் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி. ஈவேரா, அண்ணா, கருணாநிதி ஆகியோர் காட்டிய பாதையில் அவர்களது கனவு நினைவாகும் வகையில் பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த திறன் மேம்பாடு மையம் மூலம் 18 வயது முதல் 40 வயது உடைய பெண்கள் வேலைவாய்ப்பு சுயதொழில் செய்வதற்கு பயிற்சிகள் வழங்க இந்த மையம் உதவும். அரசு பணிகளில் மகளிருக்கென தனி இட ஒதுக்கீடு, சொத்துரிமை, மகளிர் ஊக்கத்தொகை, சுய உதவி குழுக்கள் மூலம் நலத்திட்டங்கள் என உதாரணங்களாக சொல்லிக் கொண்டே போகலாம். பெண்களின் உயர்கல்விகளுக்கென பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  இதில் விடியல் பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், தோழி விடுதி திட்டம் ஆகியன அடங்கும்.

பெண் அடிமைத்தனத்திலிருந்து பெண் அதிகாரம் என்னும் குறிக்கோளை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. சமுதாயத்தில் பெண்கள் உயர்ந்தால் ஒரு சமூகமே உயரும். இதேபோன்று கொளத்தூரில் அனிதா அச்சிவர்ஸ் அகாடமி என்ற பெயரில் பெண்கள் திறன் மேம்பாடு வளர்ச்சியடைய பயிற்சிகள் கொடுத்து வருகிறோம். பெரியாரின் கனவுகளை அவரது போராட்டத்தை அவரது எண்ணத்தை நிறைவேற்றும் பணியில் தமிழக அரசு பல திட்டங்களை தீட்டி வருகிறது என முதல்வர் கூறினார்.