தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட முக்கிய ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி விடுமுறை தினங்களில் நடைபெறுகிறது. இதேபோன்று திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி விடுமுறை தினங்களில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் என பல தரப்பினரும் கலந்து கொள்கிறார்கள். இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியின் போது சினிமா பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடுவதோடு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதாவது அந்த நிகழ்ச்சியில் இளம் பெண்கள் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடுவதாகவும், இது தமிழர்களின் கலாச்சாரம் இல்லையெனவும் கூறியுள்ளார். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு அவர் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்