பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகம் ஆகி அதன்பிறகு இசையமைப்பாளராக கலக்கி  வருபவர்தான் தமன். இவர் பாடகி ஸ்ரீவர்தினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில், ” ஆண்கள் யாரும் திருமணமே செய்ய வேண்டாம்” என்று அட்வைஸ் கூறியுள்ளார். திருமணம் செய்ய எது சரியான வயது என்று சொல்லுங்கள் என்று செய்தியாளர் கேள்வி கேட்க, அதற்கு பதில் அளித்த தமன், “இப்போது யாரும் திருமணம் செய்யக்கூடாது என்று நான் விரும்புகிறேன்.

மிகவும் கஷ்டமாக இருக்கிறது. பெண்கள் எல்லோரும் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். யாருக்குக் கீழும் யாரும் இருக்க விரும்பவில்லை. அப்படி ஒரு பெண்கள் சமுதாயத்தை நாம் இழந்துவிட்டோம். கொரோனாவுக்கு பிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. இன்ஸ்டாகிராம் தான் அதற்கு முக்கிய காரணம். ரீல்ஸ் எல்லாம் பாசிட்டிவ் ஆகவே இருக்கிறது. வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் குறித்து யாரும் ரீல்ஸ் வெளியிடுவது இல்லை. நான் யாருக்கும் திருமணம் செய்ய பரிந்துரை செய்ய மாட்டேன். மிகவும் கடினமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.