இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகிறார்கள். அனால் அவர்கள் கையில் தொழில் தொடங்க போதுமான பணம் இருப்பதில்லை. இந்த சூழலில் அவர்களுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் உத்யோகினி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உத்யோகினி திட்டம் என்பது இந்தியாவின் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு ரூ.3 லட்சம் வரை நிதியுதவி அளித்து ஊக்குவிக்கிறது.

உத்யோகினி திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் வயது 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். இதில், கடன் பெற விரும்புவோர் ரேஷன், ஆதார், வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ்கள், வங்கி பாஸ் புத்தகம் மற்றும் புகைப்படங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள வங்கிகளை தொடர்பு கொள்ள வேண்டும்.