
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான SBI வங்கியானது மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. பலரும் இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி வருகிறார்கள். இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அஸ்மிதா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண் தொழில் முனைவோர்களுக்காக இந்த திட்டம் பிரத்தியேகமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பினையம் எதுவுமே இல்லாமல் கடன் பெறலாம். குறைந்த வட்டி செலுத்தினால் மட்டுமே போதும். இந்த திட்டத்தின் கீழ் கடன்களை வழங்குவதற்கு அதிநவீன தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட உள்ளது.
கடன் வழங்கும் செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது. கடன் பெற நினைப்பவர்களின் செய்யும் தொழிலை பொறுத்து கடன் வரம்பு நிர்ணயம் செய்யப்படும். மேலும் இந்த திட்டத்தில் கடன் பெறுபவர்களில் சிறந்த பெண் தொழில் முனைவோரை தேர்ந்தெடுத்து தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் தொழில் முனைவோருக்கு குறைந்த வட்டியில் அடமானம் எதுவும் இல்லாமல் கடன் வழங்க தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விரைவான மற்றும் எளிதான கடன்களை பெற உதவியாக இருக்கும்.