
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் பயன் பெறுகிறார்கள். அதன்பிறகு இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததால் மேலும் விரிவாக்கப்படும் என்று கூறப்பட்டது. அதாவது புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விடுபட்டவர்கள், அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள் உள்ளிட்ட பலரும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளை இணைப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் ஒரு கடிதம் எழுதினார். அதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்ளிட்ட மக்கள் நலனுக்கான திட்டங்களில் பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் அவைகள் முறையாக பயனாளிகளை சென்று அடைகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் கூடுதல் விண்ணப்பங்கள் மற்றும் பொதுமக்களின் தேவை அறிந்து பிற தேவைகளை கவனித்து தகுதியுள்ளவர்களுக்கு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்துகிறேன் என்ற தெரிவித்துள்ளார்.