மத்திய அரசாங்கம் பெண்களுடைய நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக பெண்கள் அதிகமான லாபத்தை பெற முடியும். இந்திய தபால் துறையால் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் பெண்களுக்கு 7.5% வட்டி லாபம் கிடைக்கிறது. பெண்கள் இந்த திட்டத்தில் குறைந்த காலத்திற்கு முதலீடு செய்வதன் மூலமாக நல்ல வருமானத்தை பெற முடியும்.

இதில் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.  அதிகபட்ச முதலீட்டு வரம்பு இரண்டு லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பெண்கள் ஆர்வம் காட்டி முதலீடு செய்து வருகிறார்கள் . இதில் நீங்கள் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால் முதல் வருடத்தில் வட்டித் தொகை ரூ.15,000 ஆகவும், அடுத்த ஆண்டில் கிடைக்கும் வட்டி ரூ.16,125 ஆகவும் இருக்கும். இரண்டு ஆண்டுகளில் வெறும் ரூ.2 லட்சம் முதலீட்டில் உங்களுக்கு வட்டி வடிவில் ரூ. 31,125 கிடைக்கும்.