காஞ்சிபுரம் குன்றத்தூர் எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பொன்னம்பலம் இவர் தனது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டார். அவர் தொடர்ந்து பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் பெண்கள் துடைப்பதால் பொன்னம்பலத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

இதுகுறித்த புகாரின் பேரில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பொன்னம்பலத்தை கைது செய்தனர். இந்த நிலையில் அதிமுக கட்சியில் இருந்து பொன்னம்பலத்தை நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்தார். இதைப் பற்றி தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.