
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று குறிப்பாக 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே புயல் கரையைக் கடக்கும் நிலையில் 95 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் கடலூர் மற்றும் சென்னை மாவட்டத்தில் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பெஞ்சல் புயல் எதிரொலியாக விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இன்று புயல் எதிரொலியாக சென்னையில் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என்று அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.