
அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் தற்போது ஒரு ஆராய்ச்சியை நடத்தியுள்ளது. அதாவது பூமியிலிருந்து நிலவும் பிரிந்து சென்றபோது ஒரு பாறை உருவானது. இந்த நிகழ்வு சுமார் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த பாறையை வைத்து தற்போது அவர்கள் ஆராய்ச்சி நடத்தினர்.
அதில் பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது பூமியிலிருந்து நிலவு தினந்தோறும் 3.8 cm தூரம் வரை விலகி செல்கிறது. இதனால் பூமியின் நேரம் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதாவது 20 கோடி வருடங்களில் பூமியின் ஒருநாள் என்பது 24 மணி நேரமாக இல்லாமல் 25 மணி நேரமாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 180 ஆண்டுகளுக்கு முன்பாக பூமியின் ஒருநாள் என்பது வெறும் 18 மணி நேரமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.