சீனாவில் இறைச்சிக்கு பயன்படுத்த லாரிகளில் சுமார் 1000 பூனைகள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஜங்ஜியாகங்க் மாகாணத்தில் இறைச்சிக்காக பூனைகள் கடத்தப்படுவதாக அடிக்கடி புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் விலங்கு நல ஆர்வலர்கள் கடந்த சில நாட்களாக ஆய்வு நடத்தி வந்தனர். இந்த ஆய்வில் லாரிகளில் சுமார் 1000 பூனைகள் இறைச்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டதை பிடித்துள்ளனர்.

இது குறித்து நடத்திய விசாரணையில், பூனைகளின் இறைச்சியை ஒரு வாரம் பதப்படுத்தினால் பன்றி இறைச்சியை போல மாறிவிடுவதால் இதை பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்து வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.