தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கங்கா பரமேஸ்வரி நகரில் ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்கா மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் நிலையில் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வார்கள். அந்த வகையில் கடந்த 24ஆம் தேதி 24 வயதுடைய ஒரு இளம்பெண் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நிலையில் காலை நேரத்தில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம நபர் அந்த பெண்ணிடம் ஆபாசமான முறையில் சைகை காட்டியதோடு ஆபாசமான முறையில் நடந்து கொண்டுள்ளார். அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் இளம் பெண் தப்பி ஓடி தன் தந்தையிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தென்மலை குமரன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மேலும் இவர் ஒரு ரவுடி என்பதும்  தெரியவந்துள்ளது. இவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.