தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். இவர் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் முதல் நாள் பிரீமியர் ஷோ நிகழ்ச்சிக்காக இவரை காண ஏராளமான ரசிகர்கள் வந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் ரசிகை இறந்த நிலையில்  அவருடைய 8 வயது மகன் ஸ்ரீதேஜ் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் தற்போது ஸ்ரீதேஜ் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே ரேவதி உயிரிழந்த நிலையில் தற்போது அவருடைய மகனும் மூளைச் சாவு அடைந்துவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரேவதி உயிரிழந்த விவகாரத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிலையில் அவருடைய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று தெலுங்கானா காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது அவருடைய மகனும் மூளை சாவு அடைந்து விட்டதால் அல்லு அர்ஜுனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.