அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய்க்கான புதிய மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதற்கு AOH1996 என்று பெயரிடப்பட்டுள்ளது. அன்னா ஒலிவியா ஹீலி என்ற குழந்தைக்கு நியூரோபிளாஸ்டோமா இருந்தது. புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடிய அந்த குழந்தை 9 வயதில் தன்னுடைய வாழ்க்கையை இழந்தார். அவரது மரணத்தால் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சூழலில் மற்றொரு குழந்தைக்கு இதே நிலை ஏற்படாமல் இருக்க இந்த மருந்தை உருவாக்கியுள்ளனர். இதற்கிடையில், அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 600 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் புற்றுநோய்க்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.