பொதுவாகவே வெளிநாடுகளுக்கு செல்லும்போது விசா கட்டாயம் இருக்க வேண்டும். இதன் காரணமாகவே பலரும் வெளிநாடுகளுக்கு செல்ல பயம் கொள்வார்கள். ஆனால் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்று கூறினால் உங்களால் நம்ப முடியாது. அதாவது விசா இல்லாமல் செல்லக்கூடிய இடங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நேபாளம்:

இந்தியாவிற்கு அருகிலுள்ள நேபாளம் நாட்டை சுற்றி பார்ப்பதற்கு இந்தியா பயணிகளுக்கு விசா தேவை இல்லை.

இந்தோனேசியா:

இந்திய பயணிகள் விரும்பும் நாடுகளில் ஒன்றாக திகழும் இந்தோனேசியாவிற்கு விசா இல்லாமல் குழந்தைகளுடன் பயணம் செல்ல முடியும்.

பூட்டான்:

இந்தியாவில் உள்ள இமய மலைக்கு அடியில் இந்த நாடு உள்ளது. சுற்றுலாவிற்கு பெயர் போன நாடுகளில் பிரபலமான இந்த நாட்டிற்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல முடியும்.

செர்பியா:

ஐரோப்பாவில் உள்ள இந்த பகுதிக்கு 30 நாட்களுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல முடியும். அதாவது அடிக்கடி செல்ல முடியாது என்றாலும் ஒரு வருடத்திற்கு 30 நாட்கள் மட்டும் இங்கு செல்லலாம்.

இதனைத் தவிர பார்படாஸ்,டொமினிகா, கிரெனடா, ஹைட்டி, ஹாங்காங், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொன்செராட், செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சமோவா, செனகல் ஆகிய நாடுகளுக்கும் விசா இல்லாமல் சென்று வரலாம்.