புற்றுநோய் என்ற கொடிய நோயுடன் போராடி வெற்றி பெற்ற ஒரு சிறுவன், நீண்ட காலத்திற்குப் பிறகு தனது தலைமுடியில் காற்றை உணரும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பலரது கண்களையும் குளமாக்கியுள்ளது. சிகிச்சையின் காரணமாகத் தனது தலைமுடியை இழந்திருந்த அந்தச் சிறுவன், தற்போது குணமடைந்து மீண்டும் முடி வளர்ந்த நிலையில், காரின் ஜன்னல் வழியாக வரும் காற்றைத் தனது தலையில் உணர்ந்து பரவசமடையும் காட்சிகள் பார்ப்பவர் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளன.
மேலும் “இது என்னை அழ வைத்துவிட்டது” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளது. இந்தக் காணொளி வெறும் மகிழ்ச்சியை மட்டும் தராமல், வாழ்க்கையின் மீதான நம்பிக்கையையும் போராட்ட குணத்தையும் பறைசாற்றுகிறது. மிகச்சிறிய விஷயங்களில் நாம் காணத் தவறும் சந்தோஷத்தை, அந்தச் சிறுவனின் முகத்தில் தெரியும் நிம்மதியும் புன்னகையும் நமக்கு உணர்த்துகின்றன.
View this post on Instagram
“>
இந்நிலையில் நோயின் பிடியில் இருந்து மீண்டு வந்த அந்தப் பிஞ்சு உள்ளத்தின் வெற்றி, அதே போன்ற போராட்டத்தைச் சந்தித்து வரும் பலருக்கு ஒரு மிகப்பெரிய ஊக்க மருந்தாக அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை வைரலாக்கி வரும் மக்கள், அந்தச் சிறுவன் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழத் தங்களது வாழ்த்துகளை வாரி வழங்கி வருகின்றனர்.
