
நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பேசினார். அப்போது அவர் தனக்கு கால் வலி இருப்பதால் உட்கார்ந்து பேச அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி கொடுத்த சபாநாயகர் ஜெகதீப் தன்கர் இந்த விஷயத்தில் உங்களுக்கு நான் உதவியுள்ளேன் கார்கே ஜி என்று சிரித்தபடி கூறினார். அதற்கு கார்கே ஆமாம் அது உண்மைதான் சில சமயங்களில் எதிர்க்கட்சி எம்பிகளுக்கு நீங்கள் உதவுகிறீர்கள் என்றார்.
அதன் பின் கார்கே பேச தொடங்கிய நிலையில் பாஜக எம்பி சுதான்சு சதுர்வேதி பற்றி பேச ஆரம்பித்தார். அப்போது திடீரென பாதியில் நிறுத்திவிட்டு என்னை மன்னிக்கவும். எனக்கு திவேதி, திரிவேதி மற்றும் சதுர்வேதி ஆகிய பெயர்கள் மிகவும் குழப்பமாக இருக்கிறது. நான் தெற்கிலிருந்து வந்தவன் என்பதால் என்னால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று நகைச்சுவையாக கூறினார். இதைக் கேட்டவுடன் அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது. மேலும் இதற்கு சபாநாயகர் நீங்கள் விரும்பினால் அரை மணி நேரம் இதைப் பற்றி பேசலாம் என்று நகைச்சுவையாக கூறினார்.
Oh! You’re Trivedi, so you must have studied the three Vedas! 🤣🤣🤣
Kharge Ji’s jibe is the surname of Sudhanshu Trivedi. pic.twitter.com/Rsez6fZ5Pp— The White-Dark Knight (@syndrome_knight) July 1, 2024