வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததன் காரணமாக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டுமே துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய அணி தன்னுடைய தொடக்கத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்காளதேசத்தையும், 23ஆம் தேதி பாகிஸ்தானையும், மார்ச் இரண்டாம் தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது. இது பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் ஆடும் ஆட்டம் என்பதால் இப்போதே ரசிகர் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்த தொடரில் இருந்து நட்சத்திர பவுலர் பும்ரா காயம் காரணமாக விலகியதால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்துவீச்சாளர் என்ற ஒரு பார்மில் அவர் இருக்கிறார். இவர் தற்போது விலகி உள்ளதால் சாம்பியன்ஸ் கோப்பை இந்தியா  அணி வெல்வதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் கிரிக்கெட் என்பது டென்னிஸ், கோல்ப் போன்ற ஒரு தனி நபர் விளையாட்டு கிடையாது என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார் . இதனால் பும்ரா விலகியதை நினைத்து ஏன் கவலைப்பட வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ” அணியில் இல்லாத ஒருவரை நினைத்து ஏன் கவலைப்பட வேண்டும்? இது அணி விளையாட்டு.. அணியாக தான் வெல்ல முடியும். தனி நபர்களால் வெல்ல முடியாது. இது ஒன்றும் பேட்மிட்டன், கோல்ப் போன்று தனி நபர் விளையாட்டு கிடையாது. சாம்பியன் டிராபில் நாம் அணி விளையாட்டை விளையாட போகிறோம் .எனவே அணியாக சேர்ந்து விளையாடினால் கண்டிப்பா நம்மால் வெல்ல முடியும்” என்று கூறியுள்ளார்.