மராட்டியத்தில் ஸ்வச் முக் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர் புன்னகைக்கான தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது. அதாவது, முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவை சேர்ந்த துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பலர் முன்னிலையில் மராட்டிய அரசானது ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டது.

இதில் சச்சின் தெண்டுல்கர் மற்றும் மருத்துவக்கல்வி துறை இணைந்து கையெழுத்திட்டது. அந்த வகையில் புன்னகைப்பது, சுவைப்பது உள்ளிட்ட விசயங்களுக்குரிய வாய்வழி சுகாதாரங்களை ஊக்குவிக்கும் விதமாக தூதராக சச்சின் தெண்டுல்கர் செயல்படுவார்.