தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கத்தின் கீழ் (Startup TN) ஐந்தாவது பதிப்புக்கான விண்ணப்பம் பெறும் பணி தொடங்கியுள்ளது. டான்சீட் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 84 புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாவது பதிப்பின் மூலம் மேலும் 50 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. இதற்கு தகுதியான நிறுவனங்கள் www.startuptn.in என்ற இணையதளத்தில் மார்ச் ஐந்தாம் தேதிக்குள்(இன்று )  விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 முதல் 15 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது TANSEED 3.0-வில் தமிழக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆரம்பகட்ட ஆதார நிதியை பெற விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. புத்தொழில் நிறுவனங்கள் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு வளர்ச்சியை நோக்கி நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்ல இந்த நிதி பெரிதும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.