வாகனம் ஓட்டும் பொழுது தூக்கத்தால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக கண்ணிமையை மூடினால் உடனே அலாரம் அடிக்கும் கண் கண்ணாடியை தூத்துக்குடி சேர்ந்த மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

தூக்கத்தால் வாகன விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் வகையில் தூத்துக்குடியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர் உவைஷ் கண்ணாடியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இவர் தூத்துக்குடி முத்தையாபுரம் சாந்தி நகர் பகுதியில் வசிப்பவர். இவருடைய தந்தை சம்சுதீன்.

அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் உவைஷ் ஆன்ட்டி ஸ்லீப் கிளாஸ் என்ற கண்ணாடியை மிக குறைந்த செலவில் உருவாக்கியுள்ளார். இந்த கண்ணாடியை அணிந்துகொண்டு வாகனத்தை ஓட்டும்போது, கண் இமையை மூடினால், அதில் பொருத்தப்பட்டுள்ள அலாரம் அடிக்கும். இதற்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.