அமெரிக்காவின் ‌வாஷிங்டனில் பிறந்து வளர்ந்த அமெரிக்க நடிகை சிட்னி ஸ்வீனி, ரசிகர்களின் வினோதமான கோரிக்கையை நிராகரிக்காமல், அதையே வியாபார யோசனையாக மாற்றியுள்ளார். “நீங்கள் கேட்பதை நிறுத்த மாட்டீர்கள்” என சொல்லி, Dr. Squatch நிறுவனத்துடன் இணைந்து, ‘Sydney’s Bathwater Bliss’ என்ற பெயரில் புதிய சோப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த சோப்பில் பைன் மர சாறு, மணல், மற்றும் சிட்னியின் உண்மையான குளியல் நீரின் ஒரு சிறு பகுதியும் கலக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சோப்பின் வாசனை இயற்கை வாசனையாகவும், ஆண்மை தன்மையுடன் கூடியதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

சிறப்பு வகையில் தயாரிக்கப்பட்ட இந்த சோப்புகள் 5,000 பார்கள் மட்டுமே, ஜூன் 6 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளன. இதில் ஒரு சோப்பின் விலை இந்திய மதிப்பில் சுமார் ₹685 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விளம்பர வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டும் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.