தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த முறை வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரை நாட்கள் மட்டும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு  மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று புதுச்சேரியில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் அந்த மாநிலத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.