மதுவிலக்கு துறை அமைச்சராக முத்துசாமி நியமனம் செய்யப்பட்ட பிறகு அவர் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததால் கூடுதலாக 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகு வெளிநாட்டு இறக்குமதி சரக்குகளுக்கான விலை 20 முதல் முதல் வரை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசின் நோக்கம் கிடையாது.

மதுவுக்கு அடிமையானவர்களே அதிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் எந்த பிரச்சினையும் இல்லாமல் மது விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு விரும்புகிறது. புதிதாக மது அருந்த வரும் இளம் வயதினருக்கு கவுன்சிலிங் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது கவுன்சிலிங் அளிப்பது தொடர்பாக ஆலோசனை குழுவும் அமைக்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார்.