இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை தருவதாக கூறி பெண்களை குறி வைத்து புதிய மோசடி நடைபெற தொடங்கியுள்ளது.

திட்டக்குடியை சேர்ந்த முத்தம்மாள் என்ற 29 வயதுமிக்க பெண் ஒருவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் மகளிர் உரிமைத் தொகை தருவதாக கூறி ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்களை வாங்கி அதன் பிறகு மொபைலுக்கு வந்த ஓடிபி என்னை கூறும்படி கேட்டுள்ளார். இதனை உண்மை என்று நம்பி முத்தம்மாள் ஓடிபி எண் கூறிய அடுத்த நிமிடம் அவரது வங்கி கணக்கில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற மோசடி நபர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.