தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் புதிதாக 2.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின்  பேசிய நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான பொதுமக்களின் ஒருமித்த குரலுக்கு என்றாவது ஒருநாள் ஒன்றிய அரசு பணியத்தான் போகிறது. இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளை அல்லது நாளை மறுநாள் அது நடந்தே தீரும். புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. வாழ்க வசவாளர்கள்.

கடந்த 4 வருடங்களில் திமுக செய்த சாதனைகளை அவர் பார்க்க வேண்டும் என்று கூறினார். மேலும் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அவர் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றிய நிலையில் முன்னதாக திமுக குடும்ப அரசியல் செய்கிறது என்றும் அவர்கள் தான் தமிழ்நாட்டில் நம்முடைய முதல் அரசியல் எதிரி என்றும் விஜய் தெரிவித்திருந்தார். இதற்கு தான் தற்போது முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.