தமிழகத்தை போல தெலுங்கானாவில் தகுதியான மக்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு இல்லாதவர்களும் உடனடியாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் அரசு புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி குடும்ப தலைவரின் பெயர், வயது, பாலினம், ஜாதி, பிறந்த தேதி, ஆதார் அட்டை எண் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அது மட்டுமல்லாமல் முகவரியில், வீட்டு எண், வார்டு எண், நகராட்சி மற்றும் மாவட்டம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். அடுத்து விண்ணப்ப படிவத்தின் இரண்டாம் தாளில் பிரஜா பாலனா ரேஷன் கார்டு விண்ணப்பம் ரசீது பெயர் இருக்கும். அதை நிரப்பிய பின்னர் அதிகாரிகள் உங்களுடைய விண்ணப்பத்தை ஆய்வு செய்து தகுதி இருந்தால் புதிய ரேஷன் கார்டு வழங்குவார்கள். இந்த புதிய ரேஷன் கார்டு பெரும் நபர்கள் விவசாயி பரோசா, கிரக ஜோதி மற்றும் இந்திரம்மா இல்ல சுதா போன்ற திட்டத்தின் கீழ் பயன்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது