இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுனர் பயிற்சி பெற்று கொள்வது முக்கியம். ஒவ்வொரு பயிற்சி நிறுவனங்களுக்கும் எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பதை போக்குவரத்து துறையே முடிவு செய்கிறது. மோட்டார் சைக்கிள் பயிற்சி பெறுவதற்கு கட்டணமாக 2200, ஆட்டோ ரிக்ஷா கட்டணம் 3000, கார் மற்றும் இதர வாகனங்களுக்கான கட்டணம் 4000 வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சகம் ஓட்டுநர் பயிற்சிக்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அந்த வகையில் மோட்டார் சைக்கிள் பயிற்சி பெறுவதற்கான கட்டணம் 3000 ஆகவும், ரிக்ஷா கட்டணம் 4000 ஆகவும், கார் இதர இலகு ரக வாகனங்களுக்கான கட்டணம் 7000 ஆகவும், பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு 9000 ஆகும் ஏற்றப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண விதிமுறை இன்று (ஜனவரி 1) முதல் அமலாகிறது.